அதிர்ச்சி தரும் அரிசி விலை... மூட்டைக்கு ரூ 100 திடீர் உயர்வு!

வரிகள் உயர்வு, பல்வேறு பொருள்களின் விலை உயர்வு என வரிசையாக விலை உயர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்து மின் கட்டண உயர்வும் வரவிருக்கிறது.
இந்த நிலையில் இன்று அரிசி விலை மூட்டைக்கு ரூ 100 வரை உயர்ந்துள்ளது. பொன்னி அரிசி, கர்நாடக அரிசி மற்றும் பச்சரிசி ஆகியவற்றின் விலை கடந்த மாதத்தை விட கிலோவிற்கு ரூ. 2 முதல் 4 வரை உயர்ந்துள்ளது. 25 கிலோ மூட்டை ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடியுள்ளது. 25 கிலோ மூட்டை முதல் தர பொன்ன அரிசி கடந்த மாதம் ரூ. 780 விற்கப்பட்டது.
அவை தற்போது ரூ. 870க்கு கடைகளில் விற்கப்படுகிறது. ரூ. 90 உயர்ந்துள்ளது. ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 200 முதல் ரூ. 300 வரை அதிகரித்துள்ளது. கர்நாடக பொன்னி அரிசி கிலோ ரூ. 22-க்கு விற்கப்பட்டது. இப்போது அது ரூ. 26 ஆக உயர்ந்துள்ளது. 25 கிலோ மூட்டை ரூ. 550-ல் இருந்து ரூ. 650 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல பி.பி.டி. வகை அரிசியும், பச்சிரியும் கிலோவிற்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்ந்துள்ளது. ஐ.ஆர். 45 ரக அரிசி கிலோ ரூ. 15-க்கு கடந்த வாரத்தில் விற்கப்பட்டது. இப்போது ரூ. 18-க்கு விற்கப்படுகிறது. அரிசி விலை சென்னை நகரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உயர்ந்துள்ளது.
தனியார் பால் விலையும் உயர்வு
தனியார் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சில தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 2 விலை கூட்டியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியது நினைவிருக்கலாம்.
இந்த விலை உயர்வுகளை தமிழக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது மக்களுக்கு மேலும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications