கென்யாவில் 5 டன் யானை தந்தங்கள் தீ வைத்து எரிப்பு
Subscribe to Oneindia Tamil
நைரோபி: கென்யாவிற்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 5 டன் யானை தந்தங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு கடத்தி வரப்படுவதாக கென்ய அரசுக்கு தகவல் கிடைத்தது.
சுமார் 5 டன் எடையுடைய இந்த தந்தங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்து, தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார்.
இதையடுத்து கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி பகுதியில் தந்தங்களை மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டது. தந்தக் குவியலுக்கு அதிபர் மிவாய் கிபாகி தீவைத்தார்.
அதன் பின் அவர் கூறுகையில், பிற நாடுகளுடன் கென்யாவிற்கு சட்ட விரோத வியாபாரம் இருக்கக் கூடாது. அதற்காகவே இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன என்றார்.












Click it and Unblock the Notifications