பூஜை செய்து சாமியாடிய சிறுவன் கழுத்தில் நாகப்பாம்பு சுற்றியதால் பரபரப்பு
திருவண்ணாமலை: வேப்பமரத்துக்கு பூஜை செய்து சாமியாடிய சிறுவன் கழுத்தில் நாகப்பாம்பு சுற்றியதால் திருவண்ணாமலை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த சத்திரம்மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாரதிராஜா (16). விவசாயக் குடும்பத்தை சேர்ந்த பாரதிராஜா, சாமியாடி அருள்வாக்கு சொல்வது வழக்கம்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு, தனது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்துக்கு பாரதிராஜா பூஜை செய்து, சாமியாடியனான். அப்போது, 2 அடி நீளமுள்ள நாகப்பாம்பு அவரது கழுத்தை சுற்றியது.
தகவலறிந்த இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், பாரதிராஜாவை பால், முட்டை, பழம் ஆகியவற்றை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அப்போது, பாம்பின் கழுத்தை பிடித்து பொதுமக்கள் நெற்றியில் வைத்து ஆசிர்வதித்தான். காலை 8.30 மணியளவில் பாம்பு சிறுவன் கழுத்திலிருந்து இறங்கி, கரும்பு தோட்டத்திற்குள் சென்றுவிட்டது.












Click it and Unblock the Notifications