சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா
வாஷிங்டன்: தன்னை வெறுக்கும் சீன தலைவர்களின் மூளை இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றும், அவர்களின் செயல்கள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவும் திபெத்திய மத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். மேலும், சீனா காலபோக்கில் மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திபெத்திய மத தலைவர் தலாய் லாமா உலகம் முழுவதும் பயணம் செய்து போதனை செய்கிறார். ஆனால் அவரை சீனா அடியோடு வெறுக்கிறது. அவரை துறுவு வேடத்தில் இருக்கும் நரி என்று சீனா கூறியுள்ளது.
ரோலிங் ஸ்டோண் பத்திரிக்கைக்கு தலாய் லாமா கொடுத்த பேட்டி:
நான் ஒரு துஷ்ட சக்தி என்று சீனர்கள் மற்றும் திபெத்தியர்களை நம்ப வைக்க சீனாவை ஆள்பவர்கள் முயற்சிக்கின்றனர்.
அவர்களை யாரும் நம்பமாட்டார்கள். அவர்கள் செயல் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.
மனித மூளையின் ஒரு பகுதி சமயோஜித புத்தியைத் தருகிறது. ஆனால் சீனத் தலைவர்களுக்கு மூளையின் அந்த பகுதியே இல்லை. நான் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தி்த்தபோது நீங்கள் உங்கள் மூளையில் சிறு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதை சீனத் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றேன்.
சீன மக்கள் அரசியல் மாற்றத்தையும், கூடுதல் சுதந்திரத்தையும் விரும்புகிறார்கள். இன்னும் 50 ஆண்டுகளில் சில விஷயங்கள் மாறும் என்று நினைக்கிறேன். சீனா மாறும் என்று நம்புகிறேன்.
திபெத் விவகாரம் வெறும் தலாய் லாமாவைப் பற்றியது அன்று. 6 மில்லியன் திபெத்தியர்களைப் பற்றியது என்றார்.
சீனாவைவிட்டு பிரிய முயற்சிக்கவில்லை என்று தலாய் லாமா கூறுகிறார். ஆனால் அவர் பிரிவைத் தான் விரும்புவதாக சீனா தெரிவிக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications