கோவை வந்த கருணாநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
கோவை: இன்று நடக்கும் செயற்குழுவில் கலந்து கொள்ள கோவை வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது. அதற்காக திமுகவினர் கோவையில் குவிந்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று நடக்கும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications