அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை 'பாட்டிகளிடையே' திருமணம்
நயாகரா: ஓரினைச் சேர்க்கை திருமணத்திற்கு நியூயார்க் மாநில அரசு அனுமதி அளித்த கையோடு முதல் தம்பதிகளாக 2 மூதாட்டிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கிட்டி லம்பார்ட்(54). ஆர்ட் கேலரி மேலாளர். செரிலி ரூத் (53). உணவு பதப்படுத்தும் நிறுவன ஊழியை. ஒத்தக் கருத்துடைய இந்த இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பு கொண்டு கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணமாகி பேரன், பேத்திகளும் எடுத்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று நியூயார்க் மாநில அரசு ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளித்தது. அனுமதி அளித்தது தான் தாமதம் இத்தனை நாட்களாக காத்திருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 659 பேருக்கு திருமணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் முதல் தம்பதிகளாக லம்பார்டும், ரூத்தும் திருமணம் செய்து கொண்டனர்.
அமெரிக்கா- கனடா எல்லைப்பகுதியில் உள்ள ஸ்டேட்பார்க் தீவில் நடந்த திருமணத்தில் 100.-க்கும் மேற்பட்ட குடும்ப நண்பர்கள் கலந்துக் கொண்டனர். திருமண முடிவில், இருவரும் முத்தங்களை பறிமாறிக் கொண்டனர்.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நன்றித் தெரிவித்த லம்பார்ட், நான் இப்பொழுது தான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்., என்றார்.












Click it and Unblock the Notifications