முறை தவறிய உறவில் பிறந்த குழந்தையுடன் பெண் போலீஸ் தற்கொலை
பெரம்பலூர்: முறைத் தவறிய உறவினால் பிறந்த பச்சிளம் குழந்தையுடன், பெண் போலீஸ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகள் சவுமியா (19). தமிழக காவல்துறையில் தேர்வாகி, உளுந்தூர்பேட்டையில் 6 மாதமும், திருவெறும்பூரில் காவல் நிலையத்தில் 15 நாளும் பயிற்சி முடித்தார்.
அதன்பின், தனது வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி, மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதுவரை அவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், 60 விடுமுறையில் குழந்தையுடன் லாடபுரத்திற்கு சென்ற சவுமியாவிடம், குழந்தையின் தந்தை குறித்து பெற்றோர் தொடர்ந்து கேட்டுள்ளனர்.
இதில் துக்கத்தோடு காணப்பட்ட சவுமியா, ஊர்மக்கள் தன்னை கிண்டல் செய்வர்கள் என்ற பயத்தில், நேற்றுமுன்தினம் மாலை, குழந்தையை இடுப்பில் கட்டிக் கொண்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று கிணற்றில் மிதந்த தாய்-சேய் உடல்கள் மீட்கப்பட்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சவுமியாவின் நெருங்கிய உறவினரோடு ஏற்பட்ட முறை தவறிய உல்லாசமே, கர்ப்பத்திற்கு காரணம் எனத் தெரிகிறது. இதையடுத்து, போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications