சி.வி.சண்முகத்திடம் அமைச்சர் கருப்பசாமியின் விளையாட்டுத் துறை
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கருப்பசாமியின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய பொறுப்புகள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் பர்னாலாவின் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த கருப்பசாமி, வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவருடைய பொறுப்புகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை சி.வி.சண்முகத்திடம் வழங்கப்பட்டுள்ளன.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்த கருப்பசாமியின் துறை சமீபத்தில் தான் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications