மும்பை குண்டுவெடிப்பு- முக்கிய குற்றவாளி நேபாளத்தில் கைது
காத்மாண்டு: கடந்த 13ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்த நாட்டு போலீசார் காத்மாண்டுவில் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தின் சர்லஹி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ஷகீர் (40) என்பவர் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பலுவதார் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த இவரின் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மும்பை குண்டுவெடிப்புகள் தொடர்பாக இவர் தொலைபேசியில் பேசியதும், எஸ்எம்எஸ் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜாகீர் கடந்த வாரமே கைது செய்யப்பட்டு விட்டார். எனினும் அந்த செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு இப்போது தான் வெளியில் கசிந்துள்ளது.
மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 24 பேர் பலியானதும், 129 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications