Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை: பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் படுகொலை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இன்று காலை வாக்கிங் சென்ற பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளஞ்செழியன் (45) படுகொலை செய்யப்பட்டார்.

இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் ஆவார். இளஞ்செழியன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

இவர் மீது கொலை மற்றும் வெடிகுண்டு பதுக்கல் உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில், இவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக இவரை ராமதாஸ் நிறுத்தினார். ஆனால் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவிடம் தோல்வி அடைந்தார்.

தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், தனது அவனியாபுரம் வீட்டை விட்டு மதுரை பைபாஸ் ரோட்டில் வேல்முருகன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்.

இன்று காலை தனது மகள்களை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பை-பாஸ் ரோட்டுக்கு வந்தார். பள்ளிப் பேருந்தில் குழந்தைகளை அனுப்பி விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

துரைசாமிநகர் அருகே வந்தபோது டாடா சுமோ கார் ஒன்று இவரது பைக் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த இளஞ்செழியன் கீழே விழுந்தார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் இளஞ்செழியனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

கழுத்து, தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 வெட்டுகள் விழுந்த நிலையில் இளஞ்செழியன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். கொலையாளிகள் அதே காரில் தப்பி விட்டனர்.

சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளஞ்செழியன் பிரதேத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு்ள்ளன. முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பாமக நிர்வாகி படுகொலை சம்பவம் மதுரையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் கண்டனம்:

இந் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவருமான இளஞ்செழியன் மதுரையில் இன்று படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இளஞ்செழியன் இளம் வயதிலிருந்தே பாமகவில் தம்மை இணைத்துக்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட்டவர். ஆற்றல் மிக்க செயல்வீரர். அவரது மறைவு எனக்கும், மதுரை மாவட்ட பாமகவுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளஞ்செழியன் படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. விலைமதிப்பற்ற மனித உயிரை படுகொலை செய்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+