சுக்கல் சுக்கலாக சிதறப் போகிறது அல் கொய்தா- வாஷிங்டன் போஸ்ட்

இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி..
ஒசாமா பின்லேடனின் மரணம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்தபடி அமெரிக்கப் படையினர் நடத்தி வரும் தொடர் ஏவுகணைத் தாக்குதல் போன்றவை அல் கொய்தா அமைப்பை நிலை குலைய வைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த அமைப்பு உடைந்து சிதறவும் பெரும் உதவியாக அமைந்துள்ளது.
தற்போது அல் கொய்தா அமைப்பு பல துண்டுகளாக சிதறிப் போகும் நிலையை எட்டி விட்டது. விரைவில் அது நடக்கப் போகிறது.
உலகளாவிய அளவில் அமெரிக்க உளவுப்படையினர் நடத்திய ஆய்வில், தற்போது பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் அல் கொய்தா அமைப்பினர் விரைவில் சிதறிப் போகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அல் கொய்தாவின் மறைவால், தீவிரவாதம் அகன்று விடப் போவதில்லை. பல்வேறு தனிப்பட்ட நபர்கள் சிறு சிறு குழுக்களை ஏற்படுத்தி செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போது அல் கொய்தாவுக்கு அடுத்தபடியாக பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகிறது ஏமனில் இருந்தபடி செயல்பட்டு வரும் அந்த அமைப்பின் கிளை. இந்த அமைப்பையும் ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது வரும் காலத்தில் பெரும் மிரட்டலாகவும், ஆபத்தாகவும் உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
பின்லேடன் மரணமே அல் கொய்தா அமைப்பு சுருங்கிப் போகவும், செயலிழந்து போகவும் முக்கியக் காரணம். அந்த வகையில் பின்லேடன் மரணம் பெரும் திருப்புமுனையாகும்,. மேலும் பின்லேடனைப் போன்ற ஒரு கவர்ச்சிகரமான தலைவர் அல் கொய்தாவிடம் இல்லை என்பதாலும் அந்த அமைப்பு கரையத் தொடங்கி விட்டது என்று அந்த செய்தி கூறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications