பிரதமரை குறைகூறிய ஆ. ராசாவின் கொடும்பாவியை எரிக்க முயன்ற தங்கபாலு ஆதரவாளர்கள்
சென்னை: 2ஜி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோன் சிங் மீது குற்றம்சாட்டியதை கண்டிக்கும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ. ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.
2ஜி வழக்கி்ல் கடந்த திங்கட்கிழமை அன்று தனக்காக வாதாடிய ஆ. ராசா பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம்சாட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்க சத்தியமூர்த்தி பவன் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ. ராசாவின் உருவபொம்மையை எரிக்கப் போவதாக அறிவித்தனர்.
அறிவித்தபடி நேற்று காலை 11 மணிக்கு கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர் சபீர் தலைமையில் சுமார் 25 பேர் ஆ. ராசாவின் உருவபொம்மையோடு வந்தனர்.
அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கும் நேரத்தில் சபீரின் போன் ஒலித்தது. எடுத்தால் மறுமுனையில் தலைவர் தங்கபாலு. உருவ பொம்மையை எரித்தால் கூட்டணிக்கு பிரச்சனையாகிவிடும் அதனால் எரிக்கவேண்டாம் என்றார்.
தலைவரின் வார்த்தைகளை அங்கு கூடியவர்களிடம் சபீர் தெரிவித்தார். இதையடுத்து உருவபொம்மை எரிப்பு கைவிடப்பட்டது. இதற்கிடையே ஆ. ராசாவின் உருவ பொம்மையை தங்கபாலு ஆதரவாளர்கள் எரிக்கப்போவதாக தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் சத்தியமூர்த்தி பவன் மூன்பு கூடிவிட்டனர்.
கட்சி்க்காரர்கள் பத்தரிக்கையாளர்கள் கண்ணில் படாமல் உருவபொம்மையை ஒரு முள்புதருக்குள் வீசினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications