நில மோசடி வழக்கில் ஓமலூர் பாமக மாஜி எம்எல்ஏ தமிழரசு கைது

சேலம் மாவட்டம் பொட்டியபுரத்தைச் சேர்ந்த மாதையன் என்பவர் சேலம் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் தனக்குச் சொந்தமான நிலத்தை தமிழரசு அபகரித்து விட்டதாக கூறியிருந்தார்.
இதையடுத்து சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தமிழரசுவைத் தேடி வந்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவருக்கு வலை வீசப்பட்டது. இதில் அவர் கேரளாவில் கோழிக்கோட்டில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் தமிழரசுவைக் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை ஓமலூர் கொண்டு வரப்பட்ட தமிழரசு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழரசு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழரசு பாமகவில் மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நில மோசடி வழக்குகளில் இதுவரை திமுகவினரே பெருமளவில் கைதாகி வந்தனர். இந்த நிலையில் பாமகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications