அணுமின் உற்பத்தியில் முதலீடு செய்ய பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம்
வள்ளியூர்: பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அணுமின் உற்பத்தியில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூடன்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது முதல் அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மின் தேவையை கருத்தில் கொண்டு என்பிசிஎல் எனப்படும் இந்திய அணுமின் உற்பத்தி கழகத்துடன் இணைந்து அணுமின் உற்பத்தி செய்ய பல பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயார் நிலையில் உள்ளன.
தற்போது இந்தியாவில் 4 ஆயிரத்து 780 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் உலைகள் இயங்கி வருகின்றன. புதிதாக 6 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் 2032-ம் ஆண்டுக்குள் 63 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனல் மின்சாரம் தயாரிப்பதற்கான நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தேசிய அனல் மின் உற்பத்தி கழகம் அணு மின்சார உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது.
இது பற்றி கூடன்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி கூறுகையில்,
இந்திய அணு மின் உற்பத்தி கழகம் மிகவும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு மின்உற்பத்தி செய்வதால் எங்கள் நிறுவனத்துடன் தற்போது தேசிய அலுமினிய உற்பத்தி கழகம் (நெல்கோ), பாரத் மிகு மின் நிலையம்(பெல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தையில் இந்திய அணுமின் உற்பத்தி கழகம் ஈடுபட்டு வருகிறது. கூடன்குளத்தில் அமைய உள்ள 3வது மற்றும் 4வது அணு உலைகளில் ஏதாவது ஒன்று இந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படலாம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications