எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்

கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எதியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாஜக இன்று காலை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்றும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
ஆனால் இதை முதலில் எதியூரப்பா ஏற்கவில்லை. மாறாக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தை அவர் அதிரடியாக பெங்களூரில் கூட்டினார். ஆனால் அவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அவர் கூட்டிய கூட்டத்துக்கு அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே வந்திருந்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியுற்ற எதியூரப்பா தனது பிடிவாதத்தை தளர்த்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து கத்காரியுடன் தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசினார். கட்சி முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், கத்காரியுடன் எதியூரப்பா பேசினார். அப்போது கர்நாடகத்தில் தனது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் மேலிட முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் என்றார்.
இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலையில் கத்காரிக்கு அனுப்பி வைத்தார் எதியூரப்பா.
இதன் மூலம் கர்நாடக பாஜகவில் நிலவிய பெரும் பூசல் முடிவுக்கு வந்துள்ளது. நாளை புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்யவுள்ளது.
எதியூரப்பாவுக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய நாளை பெங்களூரில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடக்கும். மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் இக் கூட்டம் நடக்கும்.
அடுத்த முதல்வர் யார்?
அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தக்குமார், ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. இவர்களில் ஈஸ்வரப்பா, எதியூரப்பாவின் ஆதரவாளர் ஆவார். ஜெகதீஷ் ஷெட்டர் தீவிர எதியூரப்பா எதிர்ப்பாளர் ஆவார். இவர்கள் தவிர எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான வி.எஸ்.ஆச்சார்யாவும் போட்டிக் களத்தில் உள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications