கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக்கு வலைவீச்சு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் சிறுவன் குரல் கேட்டது. அவன் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான்.
உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அந்த செல்போன் நம்பரை வைத்து சிறுவனைத் தேடி வருகின்றனர்.
சிறுவர்கள் இதுபோன்று போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 14-ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த ஹர்ஷா என்ற சிறுவன் எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாகக் கூறி பிடி்பட்டான்.
இதேபோன்று கடந்த 25-ம் தேதி சென்னையி்ல் ஆங்காங்கே வெடிகுண்டு வைக்கப்போவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பழைய வண்ணாரப்பேட்டை சலீம் என்பவரின் மகன் யூசுப் என்ற சிறுவனும் பிடிபட்டான் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணைப் பயன்படுத்தி அதை தமிழகத்தில் அறிமுகம் செய்தவரான கருணாநிதிக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications