கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்?-சதானந்த கெளடாவுக்கு வாய்ப்பு!

இதனால் பலருடைய பெயர்கள் போட்டிக் களத்தில் உள்ள போதிலும் கெளடாவுக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
எதியூரப்பா பதவி விலகி விட்டார். இதையடுத்து அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தக்குமார், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, உடுப்பி எம்.பி. சதானந்த கெளடா, அமைச்சர் ஷோபா கரந்லஜே, அமைச்சர் சுரேஷ் குமார், அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய ஆறு தலைவர்களின் பெயர்கள் போட்டிக்களத்தில் உள்ளன.
இவர்களில் ஈஸ்வரப்பா, எதியூரப்பாவின் ஆதரவாளர் ஆவார். ஜெகதீஷ் ஷெட்டர் தீவிர எதியூரப்பா எதிர்ப்பாளர். ஷோபா எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளர். அனந்த்குமார் மேலிடத்து செல்வாக்கைப் பெற்றவர். சுரேஷ் குமாருக்கு அடிமட்ட பாஜகவினரிடம் நல்ல பெயர் உள்ளது.
இருப்பினும் தனக்கு அடுத்து கெளடாவைத்தான் முதல்வராக்க வேண்டும் என எதியூரப்பா நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கெளடா முன்னாள் மாநில பாஜக தலைவர் ஆவார். இவருக்கு கட்சி எம்.எல்.ஏக்கள் மத்தியில் ஆதரவு உள்ளதா என்பது தெரியவில்லை. அதேசமயம், ரெட்டி சகோதரர்கள் கெளடாவை விரும்பவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும் தேவையில்லாத சர்ச்சைக்குள் போகாதவர் கெளடா என்ற பெயர் கட்சியில் உள்ளது. அனைத்து்த தரப்பினரையும் அனுசரித்துப் போகக் கூடியவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. எனவே கெளடாவை, எதியூரப்பா ஆள் என்று பார்க்காமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்கக் கூடும் என்றும் தெரிகிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications