மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.500 உயர்வு- துவரம் பருப்பு விலை சரிவு

குண்டூர் ஏசி குடோன்களில் மிளகாய் வத்தல் இருப்பு 25 லட்சம் மூட்டைகளாக குறைந்ததாலும் தேனி, சங்கரன்கோவில் பகுதிகளில் மிளகாய் வத்தல் விளைச்சல் பரப்பளவு சரிவாலும் மிளகாய் வத்தல் விலை தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. குண்டூர் ஏசி வத்தல் குவிண்டால் ரூ.9,500-ல் இருந்து ரூ.10,000-க அதிகரித்துள்ளது. வெளிசந்தையில் ஒரு கிலோ வத்தல் ரூ.120-க்கு விற்பனையாகிறது.
மல்லி போதிய வரத்து இல்லாததால் 40 கிலோ மூட்டைக்கு ரூ.100 விலை அதிகரித்துள்ளது. ரூ.2600 முதல் ரூ.2800 வரை விற்ற நாட்டு மல்லி தற்போது ரூ.2700 முதல் ரூ.2900 வரை விற்கப்படுகிறது. ரூ.2100 முதல் ரூ.2200 வரை விற்பனையான மல்லி ரூ.2200 முதல் ரூ.2300 வரை விற்பனையானது.
பாமாயில் விலை குறைந்துள்ளதால் கடலை எண்ணெய் விற்பனை மந்தமாகி டின்னுக்கு ரூ.10 சரிந்துள்ளது. பாமாயில் 15 கிலோ டின் ரூ.890, கடலை எண்ணெய் டின் ரூ.1525-ல் இருந்து ரூ.1515 என குறைந்துள்ளது. பர்மாவில் இருந்து 3 லட்சம் மூட்டை வரத்து காரணமாக துவரம் பருப்பு மூட்டைக்கு ரூ.300 வரை குறைந்துள்ளது. இறக்குமதி பர்மா துவரை ரூ.2400-ல் இருந்து ரூ.3000-ஆகவும், துவரம் பருப்பு லயன் ரூ.5500-ஆகவும், பர்மா துவரம் பருப்பு ரூ.3500-ஆகவும், உடைசல் பருப்பு ரூ.4400-ஆகவும் விலை குறைந்துள்ளது.
விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம், உளுந்து (100கிலோ) கோவில்பட்டி ரூ.4300, பர்மா பருவட்டு ரூ.4000, பொடி ரூ.3500, உருட்டு உளுந்தம்பருப்பு ரூ.6000, பர்மா பருவட்டு ரூ.5400, பொடி ரூ.4900, தொளி ரூ.4800 என விலை சரிந்துள்ளது.
பாசிப்பயிறு (100 கிலோ) கோவில்பட்டி ரூ.3100, ஆந்திரா பயிறு ரூ.3900, இறக்குமதி பயறு ரூ.3200, பாசிப்பருப்பு லயன் ரூ.5500, கோவில்பட்டி ரூ.5100, நாடு ரூ.4800, இறக்குமதி பருப்பு ரூ.5100 என விற்பனையானது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications