ஆதர்ஷ் ஊழல்: மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் சிபிஐ விசாரணை

சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது தான் ஆதர்ஷ் குடியிருப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின.
மும்பையில் இருந்து ஒரு சிபிஐ அதிகாரிகள் குழு நேற்றிரவு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது. அந்த குழு ஆதர்ஷ் ஆவணங்கள் குறித்து இன்று ஷிண்டேவிடம் விசாரணை நடத்தியது.
ஆதர்ஷ் குடியிருப்பில் 40 சதவீத வீடுகளை ராணுவத்தினர் அல்லாதவர்களுக்கு கொடுக்குமாறு அப்போதைய வருவாய் துறை அமைச்சர் அசோக் சவான் பரிந்துரைத்தார். அதற்கு அப்போதைய முதல்வர் ஷிண்டே ஒப்புதல் அளித்தார். இதில் விந்தை என்னவென்றால் கார்கில் போரில் வீரமரணமடைந்த தியாகிகளின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்டது தான் ஆதர்ஷ் குடியிருப்பு.
ஷிண்டே தவிர மகாராஷ்டிரா முதல்வராக இருக்கையில் ஆதர்ஷ் ஆவணங்களை கையாண்ட மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடமும் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
விலாஸ்ராவ் தேஸ்முக்கிற்கு அடுத்து மகாராஷ்டிரா முதல்வராகி ஆதர்ஷ் விவகாரம் தொடர்பாக பதவி விலகிய அசோக் சவான் உள்பட 14 பேர் மீது சிபிஐ கடந்த ஜனவரியில் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆதர்ஷ் ஊழலில் தேஸ்முக்கிற்கும், ஷிண்டேவுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த சாட்சியங்களும் இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மே மாதம் தெரிவி்த்தது.
கார்கில் தியாகிகள் குடும்பத்திற்காக 6 மாடிக் கட்டிடமாக கட்ட வேண்டியது 31 மாடி வரை கட்டப்பட்டது. அதுவும் விதிமுறைகளை மீறி பாதுகாப்பு அமைச்சகத்தின் இடத்தில். இந்த விவகாரத்தில் இதுவரை பல உயர் அதிகாரிகளிடம் விசராணை நடத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications