கோவையில் லிப்டில் சிக்கி 4 வயது சிறுமி பலி
கோவை: கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்டில் சிக்கி 4 வயது சிறுமி பரிதாபமாக பலியாகினார்.
கோவை ரங்கே கவுடா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் லகேந்தா குமார் 32). காட்டூரில் மின்சார உதிரிபாகங்கள் கடை வைத்துள்ளார். அவரது மனைவி சவீதா. அவர்களுக்கு காஷிஷ் 6), ஷாவிநாகர் (4) என்னும் 2 குழந்தைகள்.
கடந்த சனிக்கிழமை ஷாவிநாகர் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். திடீர் என்று அவரைக் காணவில்லை. உடனே அவரது குடும்பத்தினர் குழந்தையைத் தேடினர். அப்போது தான் குழந்தை லிப்டுக்குள் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
3-வது மாடியில் விளையாடிய ஷாவிநாகர் லிப்டின் முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். ஆனால் அவரால் அடுத்துள்ள கிரில் கதவைத் திறக்க முடியவில்லை. அதற்குள் முன்பக்க கதவு மூடிக் கொண்டது. லிப்டும் அடுத்த மாடிக்கு சென்றுவி்ட்டதால், ஷாவிநாகர் இடையே மாட்டிக் கொண்டார்.
குழந்தை சிக்கியிருப்பதை பார்த்த உறவினர் லிப்டின் முன்பக்க கதவை உடைத்தார். அங்கு மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தை வழியிலேயே இறந்துவிட்டதாக அதை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த அடுக்குமாடி குடியிருப்பே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications