சட்டீஸ்கர் முதல்வரின் விமானத்தில் திடீர் கோளாறு-அவசரமாக தரையிறக்கம்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில முதல்வர் சென்ற தனி விமானம் திடீரென தரையறக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்கரில், அரசு விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள மாநில முதல்வர் ரமன்சிங், அமைச்சர்கள் பிரிஜ்மோகன் அகர்வால், ராம்விசார் நிதம், புன்னுலால் மோஹிலி உட்பட 8 பேர் தனி விமானத்தில் விழாவிற்கு சென்றனர்.
விழா முடிந்து, அதே விமானம் மூலம் ராய்ப்பூர் திரும்ப, ராய்காரில் உள்ள ஜிந்தால் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து 8 பேருடன் புறப்பட்ட விமானத்தில் உள்ள ஹைட்ராலிக் கருவியில் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்க முடியவில்லை.
இதை உடனடியாக கண்டுபிடித்த விமானி, முதல்வர் ரமன்சிங் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதன்பின், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் தரையிறக்கப்பட்டதால், 5 மணிநேர தாமதாக மற்றொரு விமானம் மூலம் முதல்வர் உட்பட அனைவரும் ராய்ப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications