சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
துபாய்: வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாத நோன்பு இன்று தொடங்கியது.
புனித ரமலான் மாதத்தில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, நீர் உட்கொள்ளாமல் முகமதியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். மாலை சூரிய மறைவுக்கு பின் தொழுகை முடித்து உணவு உட்கொள்வர்.
இந்தாண்டிற்கான புனித ரமலான் நோன்பு, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, சவுதி அரேபியா, லெபனான், ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் திங்கள் முதல் துவங்குவதாக, நோன்பு துவங்கும் நாளை அறிவிக்கும் குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் அங்கு நோன்பு தொடங்கியுள்ளது.
இந்த மாதம் வளைகுடா நாடுகளில் 14 மணிநேரம் பகல் பொழுதாக உள்ளது. இதனால் கடும் வெப்பம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications