ஐம்பது வயதிலும் ஒபாமா க்யூட்டாக இருக்கிறார்- மிஷல் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

Michelle with Obama
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் 4-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். லேசாக நரைத்துவிட்டாலும் 50 வயதிலும் தான் அழகாக இருப்பதாக மிஷல் நினைக்கிறார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார். வரும் வியாழக்கிழமை தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். அதிபராக பொறுப்பேற்றபோது எப்படி இருந்தாரோ இன்றும் அதே போன்று தான் உள்ளார். கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. என்ன காதோரம் நரைக்க ஆரம்பித்துள்ளது. அவ்வளவு தான்.

அதிபராக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி, வார இறுதி நாட்களில் கூடைப்பந்து, கால்ப், இளைய மகள் ஷாஷாவின் கூடைப்பந்து அணிக்கு பயிற்சி என்று சுறுசுறுப்பாக இருக்கிறார்.

நரைத்துவிட்டாலும் தான் இன்னும் அழகாக இருப்பதாக மிஷல் நினைக்கிறார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஒரு வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நான் அதிபர் ஆன பிறகு சிறிது நரைத்துவிட்டது. மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன். நான் இன்னும் அழகாக இருப்பதாக மிஷல் தெரிவித்தார். அது தானே நமக்கு வேண்டும்.

எனது காதோரம் உள்ள நரை என்னை வித்தியாசப்படுத்திக்காட்டுவதாக எனது மகள்கள் மால்யாவும், ஷாஷாவும் கூறினார்கள். ஆனால் மிஷலோ அந்த நரை என்னை வயதானவனாகக் காட்டுகிறது என்கிறார்.

இவ்வாறு அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார் என்று தி டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+