திமுக மண்டல தலைவர் வி.கே. குருசாமி மீது கொலை முயற்சி வழக்கு
மதுரை: மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல திமுக தலைவர் வி.கே. குருசாமி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மயில்முருகன் என்பவர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது முனிச்சாலையில் உள்ள காரியாலயத்தில் இருந்தேன்.
அப்போது மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல திமுக தலைவர் குருசாமி, அவரது மைத்துனர் நல்லுசாமி, மருமகன் காளீஸ்வரன் உட்பட 5 பேர் முன்விரோதம் காரணமாக என்னைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தும் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, அவர் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில் குருசாமி, அவரது மைத்துனர் நல்லுசாமி, மருமகன் காளீஸ்வரன் உட்பட 5 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
வி.கே. குருசாமி ஏற்கனவே வீடு, கடை ஆக்கிரமிப்பு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications