'எந்த பணியும் செய்யாத சிரஞ்சீவி ஒழிக!' - திருப்பதியில் பெண்கள் வெறுப்பு கோஷம்!
திருப்பதி: சொந்த தொகுதியான திருப்பதிக்கு வந்த நடிகரும் எம்எல்ஏவுமான சிரஞ்சீவியை முற்றுகையிட்டனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள். ஓட்டுப்போட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத சிரஞ்சீவி ஒழிக என்று அவர்கள் கோஷமிட்டனர்.
தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆன கையோடு, மக்கள் பணியை மறந்துவிட்டு பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸில் இணைக்கும் வேலையில் தீவிரமாக இருந்த சிரஞ்சீவி நேற்று திருப்பதிக்கு வந்தார். அவர் நின்று வென்ற தொகுதி இது.
ஏனாதி காலனி என்ற இடத்தில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் காரில் ஏறி புறப்பட்ட அவரை திடீரென வந்த பெண்கள் முற்றுகையிட்டனர். "ரசிகைகளான நாங்கள் உங்களை வெற்றி பெற வைத்தோம். ஜெயித்து 3 வருடம் ஆகிறது. திருப்பதி நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை, கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்த்து விட்டதால் தெருவில் ஆறாக ஓடும் கழிவு நீர், போக்குவரத்து நெரிசல், மின்சார பற்றாக்குறை ஆகிய குறைகளை தீர்க்கும்படி பலமுறை மனு கொடுத்தோம். ஏன் இன்னமும் அவற்றை தீர்த்து வைக்க வில்லை,'' என்று சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்தனர்.
எந்தப் பணியும் மக்களுக்காக செய்யாத சிரஞ்சீவி ஒழிக என அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.
அந்தப் பெண்களை போலீசார் விரட்டியடிக்க முயன்றனர். அவர்கள் சிரஞ்சீவி ஒழிக என்று தொடர்ந்து கோஷம் போட்டனர். இதனால் வெறுப்படைந்த சிரஞ்சீவி கோபமாக காரில் ஏறிச் சென்று விட்டார். போராட்டம் நடத்திய பெண்களில் சிலரை கைது செய்த போலீசார் சிறிது நேரம் கழித்து விடுவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications