ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி 9-ம் தேதி தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்பாட்டம்
குற்றாலம்: இலங்கை தமிழர்களுக்கு சம உரி்மை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மாகாண சுயாட்சி வழங்க வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். இறுதி கட்டப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேட்சை அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம். சமச்சீர் கல்வியை பொருத்தவரை பொது பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதலே அமுல் படுத்த வேண்டும் என்று துவக்கத்திலிருந்தே தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம்.
விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறுவதை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும். பன்னாட்டு தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications