பள்ளிப்பட்டு அருகே தேமுதிகவினர் கோஷ்டி மோதல்- விஜயகாந்த் பேனரை கிழித்து ஆவேசம்
பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தேமுதிகவினர் இடையே ஏற்பட்ட பெரும் கோஷ்டி மோதலில், அவர்களது கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் பேனரையே கிழித்து விட்டனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், ஆர்.கே. பேட்டை, தேமுதிக ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஏவி. தென்னரசு. இவர் மாவட்ட செயலாளர் அருண் சுப்பிரமணி எம்எல்ஏ ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த பொறுப்பில் கணபதி என்பவர் இருந்து வந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே. பேட்டை பஜாரில் விஜயகாந்தை வாழ்த்தி ஒன்றிய செயலாளர் தென்னரசு உள்பட கட்சியினர் பேனர் வைத்துள்ளனர்.
இதில் கணபதி சார்பில் வைத்துள்ள பேனரில் ஒன்றிய செயலாளர் கணபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் தென்னரசு கோஷ்டியினர் ஆத்திரம் அடைந்தனர்.
கணபதி வைத்திருந்த பேனரை இன்று அகற்ற முயன்றனர். இதற்கு கணபதி கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினருக்கு வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் கணபதி வைத்திருந்த பேனர் கிழிக்கப்பட்டது.
அந்த பேனரில் விஜயகாந்த்தின் படம்தான் பிரதானமாக இருந்தது. அந்தப் படத்தையே கிழித்ததால் தேமுதிகவினரே அதிர்ச்சி அடைந்தனர். பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்திக் கலைந்து போகச் செய்தனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications