கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: கிராமப்புற இளம் பெண்களுக்கு நோய்த் தொற்று உள்ளிட்டவற்றைத் தடுக்கும் வகையில் இலவசமாக நேப்கின் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்துக் கூறியதாவது:
இளம் பெண்களிடையே சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, எதிர்வரும் காலத்தில் தொற்று நோய்களையும், கருவுறாமையின் ஆபத்தையும் குறைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
கிராமப்புறங்களில் வாழும் இத்தகையப் பெண்களுக்கு ஆறு சானிடரி நாப்கின் உள்ள ஒரு பேக்கெட் ஆறு ரூபாய் என்ற மானிய விலையில் பத்து மாவட்டங்களில் விநியோகிக்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படும் கிராம சுகாதார செவிலியர்களின் மூலமாக மாநிலத்திலுள்ள கிராமப்புறங்களில் வாழும் இளம்பெண்களுக்கு சானிடரி நாப்கின் இலவசமாகவே வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் செலவாகும்.
பொது காப்பீட்டுத் திட்டம்:
அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்க இந்த அரசு ஒரு முழுமையான பொதுக் காப்பீட்டுத் திட்டத்தைப் புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, "முதல்வரின் விரிவான பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம்" என்ற மேம்படுத்தப் பட்ட இப்புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
முந்தைய அரசு செயல் படுத்திய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் இந்தப் புதிய திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் ஓர் ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் காப்பீடாக நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் வகையிலும், காப்பீட்டுக்காலம் மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்கத்தக்க வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட ஒரு சில நோய்களுக்கு காப்பீட்டு வரம்பு ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை முறைகள் அதிகரிக்கப்பட்டு குறிப்பாக மருத்துவ பராமரிப்புக்கும், குழந்தை பிறப்புக்கு பின் தேவைப்படும் சிகிச்சைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இப்புதிய திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ வசதிகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications