Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 135, மாடுகள் திட்டத்துக்கு ரூ. 56 கோடி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

Minister O.Pannerselvam reads the Budget
சென்னை: தமிழக அரசின் இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 135 கோடியும், இலவச மாடுகள் திட்டத்துக்கு ரூ. 56 கோடியும் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று 2011-12ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.

காலை 10.40 மணிக்கு சட்டசபை கூடியதும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அப்போது இலவச ஆடுகள், மாடுகள் திட்டம் குறித்து பன்னீர் செல்வம் கூறியதாவது:

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இந்த அரசு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நான்கு வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளை இலவசமாக வழங்கும்.

2011-12-ஆம் ஆண்டு, ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளை இத் திட்டத்தின் கீழ் பெற்று பயனடைவர்.இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில், ரூ.135 கோடி இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுகளின் முடிவில் ஏழு லட்சம் குடும்பங்கள் இத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். இது ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் சுமார் 10 விழுக்காடாகும்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் அன்று ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துடன் இந்த திட்டமும் தொடங்கி வைக்கப்படும்.

ஏழை எளிய மக்கள் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள சொத்தினைப் பெற்று பொருளாதார நிலையில் உயருவதுடன் தொடர்ந்து வருவாய் பெறும் வாய்ப்பினையும் ஏற்படுத்தும் ஒரு முக்கிய திட்டமாக இதை அரசு கருதுகிறது.

இந்த அரசு தீவன உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கும்.நடப்பு ஆண்டில் 24 ஆயிரம் ஏக்கரில் குறிப்பிட்ட பசுந் தீவன வளர்ப்பிற்கு மானியம் வழங்கப்படும்.நுண்ணீர் பாசனத் திட்டம், தீவனப் வளர்ப்பிற்கும் விரிவுபடுத்தப்படும்.

நுண்ணீர், பாசன தெளிப்பான்கள். வேகத் தெளிப்பான்கள் போன்றவற்றைப் பயன் படுத்த சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். அவற்றோடு தீவன சேதாரத்தைக் குறைக்க 50 விழுக்காடு மானியத்தில் 5 ஆயிரம் புல்வெட்டிகளும், 5 ஆயிரம் நறுக்கும் இயந்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இத்தகைய பசுந்தீவன உற்பத்தித் திட்ட மானியத்திற்கென அரசு ரூ.20 கோடியை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது என்றார்.

இலவச ஆடுகள் திட்டத்தோடு மாடுகள் திட்டமும் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இரு திட்டங்களுக்கும் சேர்த்து ரூ. 191 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதது. இதில் மாடுகள் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 56 கோடியாகும்.

இத்திட்டத்தின்படி ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தலா 4 ஆண்டுகள் வழங்கப்படும். அதேபோல ஏழை விவசாயிகளுக்கு கலப்பின கறவை மாடுகள் வழங்கப்படும். மொத்தம் 60,000 மாடுகள் இந்த ஆண்டு வழங்கப்படும்.

பட்ஜெட் துளிகள்:

- பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

- ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி அமைக்கப்படும்

- காவல்துறை நவீனத்திற்கு ரூ.51 கோடி

- சென்னை மாநகருடன், புறநகர் காவல் ஆணையரகம் இணைப்பு

- சேலம், நெல்லை உள்பட 6 நகரங்களில் சைபர் கிரைம் ஆய்வகங்கள்

- 16,000 பேராக ஊர்க்காவல் படையினர் அதிகரிப்பு

- ஊர்க்காவல் படையினருக்கான தினப்படி ரூ. 150 ஆக அதிகரிப்பு

- தமிழக திட்டப் பணிகளுக்கு ரூ. 91.936 கோடி

- சிறைகள் மேம்பாட்டுக்கு ரூ. 117 கோடி

- புதிய சென்னை பெருநகர் காவல் ஆணையகம் நான்கு மண்டலங்களைக் கொண்டதாக இயங்கும்

- நடப்பாண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு

- விதை மானியத்திற்காக ரூ. 85.09 கோடி ஒதுக்கீடு

- தடையில்லாமல் உரம் வழங்குவதற்கான மானியம் ரூ. 150 கோடியாக உயர்வு

- விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க ரூ. 3000 கோடி ஒதுக்கீடு

- சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணிய நீர்ப்பாசனத்திற்கு 100 சதவீத மானியம்

- ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு

- 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில்

- முத்தரசநல்லூரில் ரூ.32 கோடியில் தடுப்பணை

- போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும்

- விவசாயிகளுக்கு 60,000 கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்

- ரூ. 248 கோடியில் ஒரு லட்சம் சூரிய சக்தி தெரு விளக்குகள்

- ரூ. 5000 கோடியில் சாலைகள் சீரமைப்பு

- சென்னை அருகே புதிய கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஆலை

- நெல்லை, ஓரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள்

- இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 135 கோடி ஒதுக்கீடு

- இலவச கலப்பின கறவை மாடுகள் வழங்க ரூ. 56 கோடி

- மீனவர்கள் புதிய விசைப் படகுகள் வாங்க மானியத்துடன் நிதியுதவி

- ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி-திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ. 25 கோடி ஒதுக்கீடு

- கடலோர நகரங்களில் 13 மீன் பதப்படுத்தும் மையங்கள்

- மீனவர்களுக்கு மீன்பிடி அல்லாத காலங்களில் ரூ. 4000 சிறப்பு உதவித் தொகை

- நாகை, பழையாறில் நவீன மீன்பிடி துறைமுகங்கள்

- அணைகள் புனரமைப்புக்கு ரூ. 745 கோடி ஒதுக்கீடு

- ரேஷன் கடைகளில் இலவச அரி வழங்க ரூ. 4500 கோடி ஒதுக்கீடு

- ரூ. 367 கோடியில் ஏரிகள், குளங்கள் சீரமைப்பு

- சமையல் காஸ் சிலிண்டர்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி ரத்து

- தனியார் நிலங்களில் ரூ. 43 கோடியில் 3 கோடி மரங்கள் வளர்ப்பு

- அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்

- பல உறுப்பினர் வார்டுகள் ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றம்

- நடப்பாண்டில் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

- புதிய நில எடுப்புக் கொள்கை உருவாக்கப்படும்.

- முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைப்பு

- குறு சிறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கு 3% வட்டியில் தள்ளுபடியில் கடன்

- மென்பொருள்,வன்பொருள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை

- விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கும்

- அடுத்த ஆகஸ்ட்டுக்குள் மின்வெட்டு முழுமையாக அகலும்

- மின் உற்பத்தி நிலைமைக்கேற்ப மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படுகிறது

- பள்ளிகளில் கட்டமைப்பு வசதிக்கு ரூ. 498.24 கோடி

- மேலும் 106 கோவில்களுக்கு திருக்கோவில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்

- ரேஷன் கடைகளில் சிறப்பு சலுகைத் திட்டம் இந்த ஆண்டு வரை நீடி்ப்பு

- கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின் திட்டம்

- மகப்பேறு திட்ட உதவித் தொகை ரூ. 12,000 ஆக உயர்வு

- சட்டசபை உறுப்பினர்கள் தொகுதி உதவி நிதி ரூ. 2 கோடியாக அதிகரிப்பு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+