Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 125 கோடியில் 3000 பஸ்கள் வாங்கப்படும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக கழகங்களுக்கு ரூ. 125 கோடியில் 3000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து கூறியதாவது:

போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்து கழகங்களுக்கு உதவித்தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புர மக்கள் தொகையின் மிக வேகமான வளர்ச்சி நகர்புர போக்குவரத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னைப் பெருநகர் பகுதி அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரும் நகரமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னையில் ஒருங்கிணைந்த நகர்புர போக்குவரத்து முறையினை மேம்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரில் தற்போதுள்ள பொது போக்குவரத்துடன் மெட்ரோ ரெயில் திட்டத்தினை ஒருங்கிணைத்தல், சென்னையில் பல பகுதிகளை ஒருங்கிணைக்கக்கூடிய விரிவான மோனோ ரெயில் அமைப்பினை நிறுவுதல் வாயிலாக ஓர் ஒருங்கிணைந்த பன்முறை நகரப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்.

மோனோ ரெயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+