சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்
சென்னை: சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.
அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சாலையில் சுற்றியுள்ளனர். இதைப் பார்த்த சிலர் அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சமயத்தில் கிட்டத்தட்ட 50 பேர் திரண்டு வந்து அந்த சிங்களர்கள் தங்கியிருந்த விடுதிக்குள்ளும் புகுந்து சரமாரியாக தாக்கினர். இதில் சில சிங்களர்கள் காயமடைந்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேரைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து சிங்களர்கள் பெரும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் இடமாற்றினர். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications