லோக்பால் மசோதா நகலை எரித்து அன்னா ஹஸாரே போராட்டம்- அரசு கண்டனம்
டெல்லி: லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் நகலை, சமூக சேவகர் அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் இன்று தீவைத்து எரித்துப் போராட்டம் நடத்தினர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் இன்று மத்திய அரசின் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அன்னா ஹஸாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அன்னா ஹஸாரே தலைமையில் மசோதா நகல்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் ஹஸாரே கூறுகையில், இந்த மசோதாவை நாங்கள் அப்படியே ஏற்க முடியாது. தற்போதைய மசோதாவால் ஊழலை திறம்பட ஒழிக்க முடியாது. முழுமையான பலனை இது தராது.
ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது மசோதா நகல்களை எரித்து மிகப் பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டுவோம். நாடு முழுவதும் மக்கள் இந்த மசோதா நகல் எரிப்பில் பங்கேற்குமாறு அழைக்கிறோம் என்றார்.
அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த கேஜிரிவால் கூறுகையில், மத்திய அரசு தன்னிச்சையாக, சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாகவே இந்த மசோதா நகல் எரிப்பை நடத்தினோம் என்றார்.
காங்கிரஸ், மத்திய அரசு கண்டனம்
ஹஸாரே குழுவினரின் இந்தப் போராட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மசோதா நகல்களை எரிப்பது தவறான செயல். அவர்கள் இப்படிச் செய்வதற்குப் பதில் நாடாளுமன்றம் மீது நம்பிக்கை வைக்க முன்வர வேண்டும். அவர்களது இதயத்தில்தான் தீ இருக்க வேண்டுமே தவிர நாடாளுமன்றத்தின் மீத வைக்கக் கூடாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications