குருவாயூர் கோவிலுக்கு குண்டு மிரட்டல்: சென்னையைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் வந்தது. அல் கொய்தா பெயரில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில குருவாயூர் கோவிலை ஒரு சில தினங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போதவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த மிரட்டல கடிதம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி குருவாயூர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடிதம் சென்னையில் போலீஸ் அதிகாரிகள் வசிக்கும் காலனியில் உள்ள தபால் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோவை கியூ பிரிவு போலீசார் குருவாயூருக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடிதத்தை அனுப்பியதில் சென்னையைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட பூசல் காரணமாக இந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சூரை சேர்ந்த ஜோசப் என்பவர் சாவக்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு உள்ளது. இது குறித்த விசாரிக்க போலீசாருககு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்ரீகுமார் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு குருவாயூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications