கோத்தபயாவை பிரதமராக்க ராஜபக்சே திட்டம்?

விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர் கோத்தபயா. புலிகளை முறியடிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இவரை பிரதமராக்க ராஜபக்சே முயல்வதாகத் தெரிகிறது. விரைவில் செய்யப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அவரை பிரதமராக்கிவிட ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பௌத்த பிக்குகளிடம் ராஜபக்சே ஆலோசனை நடத்தியுள்ளார்.
போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்படும் சர்வதேச குற்றச்சாட்டுக்களை சமாளிக்க வசதியாக கோத்தபயாவை பிரதமராக்க முயல்வதாகத் தெரிகிறது.
மேலும் கோத்தபயாவுக்கு முக்கிய பொறுப்பு தர வேண்டும் என ராஜபக்சே குடும்பத்திற்குள்ளும் நெருக்குதல் தரப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.
யார் பிரதமராவது என்பதில் பசிலுக்கும் கோத்தபயாவுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. ஆனால், பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ள பசில் ராஜபக்சேவை அந்தப் பதவிக்கு நியமித்தால் தான் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்று மஹிந்தா ராஜபக்சே தனது குடும்பத்தாரை எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது
எல்லாவற்றுக்கும் இந்தியாவிடம் ஓட வேண்டுமா?- கே.பி.:
இந் நிலையில் எல்லா விவகாரங்களுக்கும் இந்தியாவிடம் ஓடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே பி என்ற குமரன் பத்மநாதன் இலங்கை அரசுக்கு யோசனை கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். எல்லாத் தேவைகளுக்கும் இந்தியாவிடம் செல்லக் கூடாது. இந்திய தலையீடு குறித்து பெரும்பான்மையான இலங்கை மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
10 கோடி சிங்கள மக்கள் மீது 6 கோடி தமிழக மக்களின் நெருக்கடி உள்ளதாக இலங்கை மக்கள் கருதுகின்றனர். இந்த அச்சத்திற்கு நாம் எண்ணெய் ஊற்றக் கூடாது, சிறு விஷயங்களுக்கு எல்லாம் இந்தியாவிடம் ஓடக் கூடாது.
இந்த விஷயத்தை பொறுப்பு வாய்ந்த நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் வை.கோ, சீமான் போன்றவர்களின் ஆக்ரோசமான உரைகள் மக்களை திசைதிருப்பக் கூடும்.என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications