சிங்கம், புலி, சிறுத்தை, காளைகளை வைத்து விளையாடக் கூடாது-ஜெயராம் ரமேஷ் போட்ட தடை!

இந்தத் தடை உத்தரவில் ஜூலை மாதம் 11ம் தேதி அவர் கையெழுத்திட்டுள்ளார். தற்போதுதான் அது வெளியில் தெரிய வந்துள்ளது. அதுவும் நடிகை ஹேமமாலினி மூலமாக வெளியில் வந்துள்ளது.
சமீபத்தில்தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் புதிய சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். புதிய பொறுப்புக்குப் போகும் முன்பு தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து விட்டுப் போயிருக்கிறார் ரமேஷ்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு வழக்கில் தமிழகத்திற்குப் பாதகமாக நடந்து கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் ஜெயராம் ரமேஷ் என்பதால்,ஜல்லிக்கட்டு தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள தடை உத்தரவு தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 11ம் தேதி ஜெயராம் ரமேஷ் பிறப்பித்த ஒரு அறிவிக்கையில், புலிகள், சிங்கங்கள், கரடிகள், சிறுத்தைகள், குரங்கள் உள்ளிட்டவற்றை பொது இடங்களில் எந்தவிதமான முறையிலும் பயன்படுத்தத் தடை உள்ளது. தற்போது இந்த விலங்குகள் வரிசையில், காளைகளும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயராம் ரமேஷ் கடைசியாக கையெழுத்துப் போட்ட இந்த உத்தரவுக்கு நடிகை ஹேமமாலினி பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
யானைகளையும் தடை செய்வார்களா?
இதற்கிடையே கேரளாவில் மிகவும் அபாயகரமான சூழலில் யானைகளை வைத்து ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடத்தப்படுவதுண்டு. அதுபோன்ற அபாயகரமான விளையாட்டுக்களையும் மத்திய சுற்றுச்சூழல் துறை தடை செய்யுமா என்று சில விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காளைகளை விட யானைகள் மிகவும் அபாயகரமானவை. குறிப்பாக அவற்றை ஓட்டப் போட்டியில் ஈடுபடுத்தும்போது திடீரென மதம் பிடித்தால் பெரும் உயிரிழப்புகளுக்கும், நாசங்களுக்கும் வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற விளையாட்டுக்களுக்கும் தடை செய்ய வேண்டும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதுவரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை முழுமையாக தடை செய்யாத நிலையில், நிபந்தனைகளுடன் நடத்த அனுமதித்து வரும் நிலையில் ஜெயராம் ரமேஷ் தன்னிச்சையாக இப்படி ஒரு தடையை விதித்து விட்டுப் போயிருப்பது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விரும்பிகளை, ஆதரவாளர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications