சாலை விபத்தில் சிக்கி பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து படுகாயம்

விஜய் டிவியில் அறிமுகமாகி சக்கை போடு போட்ட நிகழ்ச்சி கலக்கப் போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவைத் திறமை வாய்ந்த திறமையாளர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டியது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் மதுரையைச் சேர்ந்த முத்து.
'ஸ்டேண்ட் அப்' காமெடியில் பின்னும் இவர் மிகச் சிறந்த நகைச்சுவை பேச்சாளர். இவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. பின்னர் சன் டிவி, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை ஹைஜாக் செய்து, அசத்தப் போவது யாரு என்ற பெயரில் நடத்தியபோது அதிலும் மதுரை முத்து இடம் பெற்று ஸ்டார் பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.
விஜய் டிவி, பின்னர் சன் டிவி மூலம் கிடைத்த வெளிச்சப் புகழால் இவர் பல்வேறு மேடைநிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.
இந்த நிலையில், திருச்சியில், நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் பயணித்தார் முத்து. அவருடன் அவரைப் போலவே கலக்கப் போவது யாரு மூலம் பிரபலமான நாகேஷ் செல்லக்கண்ணு உள்ளிட்டோரும் சென்றனர்.
கார் விராலிமலை அருகே வந்தபோது சாலை விபத்தில் சிக்கியது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது மோதியது. இதில் முத்து உள்ளிட்ட காரில் இருந்த நான்கு பேரும் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications