பாளை மத்திய சிறையில் 2 வாரத்தில் 7 காவலர்கள் திடீர் மாற்றம்
நெல்லை: கடந்த 2 வாரத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியாற்றிய காவலர்கள் 7 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையி்ல் அடைக்கப்படும் கைதிகளின் சாதி மற்றும் குடும்ப பின்னணி என்ன என்பதை சில காவலர்கள் தெரிந்து கொள்வர். பின்னர் அந்த கைதி தன் சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு சில காவலர்கள சலுகை வழங்குவர். இதை மற்ற காவலர்கள் கண்டித்தால் என்னுடைய சாதி கைதிக்கு நான் உதவுகிறேன். வேண்டுமானால் நீங்களும உதவி செய்யுங்கள் என்பர். சில காவலர்கள் கட்சி சார்பாகவும் இயங்கி வருகின்றனர்.
இதை அங்கு நேர்மையாக பணியாற்றி வரும் சிலர் எதிர்த்தால் அவர்களை பற்றி சென்னையிலுள்ள சிறைத்துறை தலைமையகத்துக்கு மொட்டை கடிதங்கள் அனுப்பி வேறு இடத்திற்கு மாற்றிவிடுவர். இதனால் எத்தகைய சோதனை நடத்தினாலும் கைதிகள் மத்தியில் தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் சிறைத்துறை ஏடிஜிபி டோக்ரா உத்தரவின் பேரில் மத்திய சிறையில் பணிபுரியும் தலைமை காவலர்கள் தேவபாலசிங் மதுரைக்கும், முருகேசன் வேலூருக்கும், காவலர்கள் செந்தூர்பாண்டி புழல் இரண்டுக்கும், நயினார் கடலூருக்கும், ராஜா புழல் ஒன்றுக்கும் மாற்றப்பட்டனர்.
குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் பாளையங்கோட்டை மத்திய சிறைக் காவலர்கள் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இவர்கள் மாற்றப்படுவதாக சிறைத் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாற்றப்பட்ட 2 காவலர்கள் மட்டும் கைதிகளுக்கு சலுகை காட்டியதாகவும், அவர்களோடு புகாருக்கு ஆளாகாத மேலும் 5 காவலர்களை சேர்த்து பணியிட மாற்றம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications