ரயில்களில் ஏ.சி. பெட்டிகளின் கட்டணம் உயர்கிறது?

Subscribe to Oneindia Tamil

Train AC Fare
டெல்லி: ரயில்களில் ஏ.சி., பெட்டிகளின் பயணக் கட்டத்தை உயர்த்துவது குறித்து ரயில்வே யோசித்து வருவதாக, மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.

ரயில்வே நிதி நிலைமையை மேம்படுத்தும் வகையில் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து தினேஷ் திரிவேதி கூறியதாவது:
ரயில்வேயின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே தொழிற் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், திட்ட கமிஷனின் வற்புறுத்தலையும் மீறி, கடந்த 8 ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த உயர்வை செய்யவில்லை. ஆனால், தற்போது அளித்துள்ள தணிக்கை அறிக்கையில், கட்டண உயர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சாதாரண மக்களை பாதிக்காத வகையில், ஏ.சி., வகுப்பு பெட்டிகளின் பயணக் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தவே விரும்புகிறோம்.

பொது வகுப்பு பெட்டிகளின் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இருக்க கவனமாக செயல்படுவோம். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகு, கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+