டெல்லி செல்ல ஏழை மாணவனுக்கு ரூ 10,000 கொடுத்து உதவிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராபுரம் தொகுதி, மணவாடி பெரிய காலனியை சேர்ந்த சிவக்குமார் - விஜயா தம்பதிகளின் மகன் அஜித்குமார் (14). இவர் மணவாடி அரசு நடுநிலைப்பள்ளி 8 ம் வகுப்பு படித்து வருகின்றார்.
கரூர் வெண்ணெய்மலையில் உள்ள கொங்கு பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான "இன்ஸ்பியர்' விருதுக்கான அறிவியல் கண்காட்சியில் மாணவர் அஜித்குமார் பங்கேற்றார்.
அதில், தண்ணீர் மூலம் இயங்கும் பொக்லைன் இயந்திரத்தை காட்சிக்கு வைத்திருந்தார். இவரின் படைப்பு சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டது.
சென்னையில் நடந்த அறிவியல் மாநாட்டில், கரூர் மாவட்டம் சார்பாக பங்கேற்ற குழுவில் அஜித்குமார் பங்கேற்றார். அங்கும் அவரது படைப்பு சிறந்த படைப்பாக கருதப்பட்டது.
இதனையடுத்து, அகில இந்திய அளவில் டெல்லியில் ஆகஸ்ட் 14,15,16 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்க அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியில் பங்கேற்க விரும்பிய அஜித்குமாருக்கு நிதி வசதி இல்லாததால், டெல்லிக்கு சென்று போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்த கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. காமராஜ், தனது சொந்த பணம் 10 ஆயிரம் ரூபாயை அஜித்குமாருக்கு வழங்கினார்.
காலத்தினால் எம்.எல்.ஏ. காமராஜ் செய்த உதவி பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
இவர் ஏற்கனவே, தனது இரண்டு மாத சம்பளம் ரூ ஒரு லட்சத்தை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications