திருப்பதி அருகே சாலை விபத்தில் 4 கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் உள்பட 5 பேகர் பலி
திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து வீடு திரும்பி 5 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகினர். இதில் 4 பேர் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் ஆவர்.
சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க்கில் மயிலாப்பூரை சேர்ந்த வசீம்ராஜா (25), நீலங்கரையை சேர்ந்த கார்த்தி (24), வடபழனியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (28), சூளையைச் சேர்ந்த சதீஷ் (26), அசோக், கார்த்தி, தப்பான் ஆகியோர் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜீனியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 7 பேரும் திருப்பதி கோயிலுக்கு பஸ்சில் சென்றனர். திருப்பதியில், சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, அங்கிருந்து, காளஹஸ்தி கோயிலுக்கு செல்ல வாடகை ஜீப் ஒன்றில், 7 பேரும் பயணித்தனர்.
ஜீப்பை திருப்பதியை சேர்ந்த சதீஷ் (25) ஓட்டினார். சீதாராம்பேட்டை அருகே ஜீப் வந்த போது, எதிரே நெல்லூரி்ல் இருந்து தக்காளி ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜீப்பில் வந்த ஜெயமூர்த்தி, சதீஷ், வசீம்ராஜா, கார்த்தி, டிரைவர் சதீஷ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த மற்றவர்கள், திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தால், திருப்பதி-காளஹஸ்தி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications