கூட்டணி விஷயத்தில் தங்கபாலு இரட்டை வேடம்: இதயதுல்லா
மதுரை: கூட்டணி விஷயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இரட்டை வேடம் போடுவதாக, சீரமைப்புக் குழு துணை அமைப்பாளர் இதயதுல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
சீரமைப்புக் குழு துணை அமைப்பாளர் இதயதுல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
சீரமைப்புக் குழு அமைப்பாளர் வடிவேலு, மாநிலச் செயலாளர் ஜோதி ராமலிங்கம், என்னையும் (இதயதுல்லா) நீக்குவதாக, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை போலியானது. சட்டசபைத் தேர்தலின் போது, வேட்பு மனுவில் பொய் தகவல்களைத் தெரிவித்ததாக, தங்கபாலு மீது தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியது.
தமிழக காங்கிரஸ் கட்சியில், 80 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்ததாக, தங்கபாலு கூறுகிறார். அந்த அளவுக்கு உறுப்பினர்களைச் சேர்த்திருந்தால், காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எங்களை சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழையக்கூடாது என, தங்கபாலு உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆகஸ்ட் 9ம் தேசிய தியாகிகள் தினத்தில், வடிவேலு தலைமையில் அங்கு செல்வோம். எங்களை அவரால் மட்டும் அல்ல யாராலும் தடுக்க முடியாது.
கல்லூரி மற்றும் மலைவாழ் மக்களுக்குச் சொந்தமான, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தங்கபாலு அபகரித்துள்ளதாக, குற்றச்சாட்டு உள்ளது. அதிலிருந்து தப்பிக்க, அவர் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவது போல், நாடகமாடுகின்றார்.
வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பியதில், அவர் மீது பல கிரிமினல் வழக்குகள், எம்.ஜி.ஆர். ஆட்சியில் போடப்பட்டன. கூட்டணி விஷயத்திலும் தங்கபாலு, இரட்டை வேஷம் போடுகிறார். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு இதயதுல்லா கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications