நானோ பில்டரிங் டெக்னாலாஜி திருப்பூருக்கு தேவையில்லை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
திருப்பூர்: சாயக்கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்றும் வகையில், நானோ பில்டரிங் டெக்னாலாஜி, திருப்பூருக்கு தேவையில்லை என்று சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு துறை செயலாளரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான (பொறுப்பு) சங்கர் கருத்து தெரிவி்த்துள்ளார்.
சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு துறை செயலாளரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான(பொறுப்பு) சங்கர், திருப்பூர் அருள்புரத்தில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட பின், கூறியதாவது:
திருப்பூர் அருள்புரத்தில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தை பிரைன் சொல்யூசன் தொழில்நுட்பம் பயன்படுத்தி, சோதனை முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த முறையில், எவாப்லேட்டர் முறையாக இயங்காததால் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.
சாய கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்றும் வகையில், நானோ பில்டரிங் டெக்னாலாஜி எனும் தொழில்நுட்பத்தை குஜராத் சென்று பார்வையிட்டோம். அந்த திட்டம் சிறப்பாக உள்ளது. ஆனால் நானோ டெக்னாலஜி தேவையில்லை. ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை செயலாக்கும் பட்சத்தில், அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் சாய ஆலைகள் மீண்டும் இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
திருப்பூரில், சாயக்கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்ற 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கும் என அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எந்த தொழில் நுட்பத்தின் மூலம் சுத்திகரிப்பு செய்வது, அதற்கு எவ்வளவு செலவாகும் என சுத்திகரிப்பு நிலையங்கள் மதிப்பீடு தயார் செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு இது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு சங்கர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications