விஜயகாந்த்தின் தேர்தல் வாக்குறுதியை 'சுட்ட' தமிழக அரசு: வீடு வீடாக ரேஷன் பொருள் விற்பனை செய்ய யோசனை

இது தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது முதல் சட்டசபைத் தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த முக்கியமான வாக்குறுதியாகும்.
தேமுதிகவை ஆரம்பித்த பின்னர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சி தேர்தலைச் சந்தித்தபோது விஜயகாந்த் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். அதில் ஒன்று வீடு வீடாக ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரடியாக விநியோகிப்போம் என்பதாகும். அந்த வாக்குறுதியைத்தான் தற்போது அதிமுக அரசு பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 80 லட்சம். இதில் சுமார் 1கோடியே 10 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். ரேஷன் கார்டுகள் வைத்துள்ளவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள 36 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் அரிசி, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது எடை குறைப்பு ஏற்படும் நிலையில் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
மேலும் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் மாதக்கடைசியில் பொருட்கள் வாங்கச் செல்பவர்களுக்கு சீனி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் கிடைப்பதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள், புரோக்கர்கள் அப்பொருட்களை வாங்தி கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகளிடம் புதிய தி்ட்டம் தீட்டுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள அனைத்து பொருட்களையும் வீடு, வீடாகச் சென்று வினியோகிக்க நடமாடும் வேன்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications