அரசு கேபிள் டிவி உரிமம் பெற அதிமுகவினர் போட்டாபோட்டி
சென்னை: தமிழகத்தில் அரசு கேபிள் டிவிக்கு உரிமம் வாங்குவதில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது அரசு சார்பில் கேபிள் டிவி அமைக்கப்படும் என்று அறிவி்க்கப்பட்டு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் அலுவலகம் அமைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் அரசு கேபிள் டிவி அமைப்பதற்குத் தேவையான உபகரணங்கள் எல்லாம் வாங்கப்பட்டது. ஓரிரு மாதங்களில் ஒளிபரப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டதோடு சரி, அது செயல்வடிவம் பெறவேயில்லை.
காலங்கள் உருண்டோடி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதி்முகவுக்கு பெரும்பான்மையான இடங்களை அள்ளிக் கொடுத்து எதிர்கட்சி என்ற அந்தஸ்தைத் கூட திமுகவுக்கு கிடைக்கவிடாமல் மக்கள் தக்க பாடம் புகட்டினர். ஆட்சிக்கு வந்த அதிமுகவும் கேபிள் டிவியை அரசே குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஆலோசனை நடத்தியது. இதையடுத்து கடந்த 4-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிலை அறிக்கையில் அரசு கேபிள் டிவி தி்ட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பி. பன்னீர் செல்வம் சட்டசபையில் அறிவித்தார்.
அந்த அறிவிப்புக்கு பின் தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி எம்எஸ்ஓக்கள் அலுவலகங்கள் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்களில் ஒரு சாரார் நகரப்பகுதி, கிராமப்பகுதிகளில் எம்எஸ்ஓக்களிடம் இணைப்பு பெற்று வீடுகளுக்கு கேபிள் இணைப்புகளை வழங்கினர். இதில் வாய்ப்புகள் கிடைக்காத சிலர் மாதா மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை எம்எஸ்ஓக்களிடம் செலுத்தி தபால் நிலையங்களில் அனுமதி பெற்று உள்ளூர் தொலைக்காட்சிகளை தொடங்கினர். இந்த தொழிலும் கடந்த 4-ம் தேதி இரவு முதல் அதிரடி சோதனை கைதுகள் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று முதல் ஏராளமான அதிமுக பிரமுகர்கள் கேபிள் டிவி வினியோக உரி்மை பெறுவதற்கு முண்டியடித்துக் கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர். நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரிமம் பெற விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே மதுபான கடை பார்கள் அனைத்தும் அதி்முகவினர் கைவசம் உள்ள நிலையில் தற்போது அரசு கேபிள் டிவி திட்டமும் சப்தமின்றி அதிமுகவினர் வசமாகிவிடுமோ என இத்தொழிலில் ஈடுபட்டுள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள் கவலை அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications