உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு கூட்டுறவு தேர்தல்: அமைச்சர் செல்லூர் ராஜூ
விருதுநகர்: உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும் என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்த கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ரேசன் கடையில் பொதுமக்களுக்கு தரமான அரிசிகளை மட்டுமே வழங்க வேண்டும். தரமில்லாத அரிசிகளை வழங்க கூடாது. பொதுமக்கள் வசதிக்காக தேவையான பகுதிகளில் பகுதிநேர ரேஷன் கடைகள் துவக்கப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தொடக்க கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்த வகையில், கூட்டுறவுத் துறைக்கு 500 கோடி ரூபாய் வர வேண்டியது உள்ளது.
இந்த தொகை வந்தவுடன் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதன்பின்பு முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி, கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும், என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications