நில அபகரிப்பு வழக்கில் கைதான திமுக மாஜி எம்.எல்.ஏ. புரசை ரங்கநாதனுக்கு குண்டர் சட்டம்
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாஜி திமுக எம்.எல்.ஏ. புரசைவாக்கம் ரங்கநாதனுக்கு குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
ரூ. 150 கோடி மதிப்புள்ள நிலத்தை அவற்றுக்கு உரியவர்களிடமிருந்து பறித்து ஆக்கிரமித்ததாக வில்லிவாக்கம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான புரசை ரங்கநாதன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அதிரடியாக அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் ரங்கநாதனையும், அவரது உதவியாளர் கவுரிசங்கரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை போலீஸ் ஆணையர் ஜே.கே.திரிபாதி பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் இருவரும் ஒரு வருடத்துக்கு ஜாமீனில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications