பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து முதல்வருக்கு விலக்கு
திருவனந்தபுரம்: பாமாயில் இறக்குமதி ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணையில் இருந்து தனக்கு லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1991ம் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது, கருணாகரன் முதல்வராக இருந்தார். அப்போது, நிதியமைச்சராக இருந்த உம்மன்சாண்டி, தற்போது கேரள முதல்வராக உள்ளார். அப்போது, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதில், 2.32 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.
அதன்பின், ஆட்சி மாறியதும் முதல்வர் கருணாகரன், உணவுத் துறை அமைச்சர் முஸ்தபா, பாமாயில் நிறுவன இயக்குனர்கள் உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிக்கிய மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸின் பதவி நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
தற்போதைய முதல்வர் உம்மன்சான்டி இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார். அதன்பின், அப்போதைய அமைச்சராக இருந்த முஸ்தபா திருவனந்தபுரம் லஞ்சஒழிப்பு நீதிமன்றத்தில் தக்கல் செய்த மனுவில், 'பாமாயில் இறக்குமதி குறித்து அப்போது நிதித்துறை அமைச்சராகயும் வழக்கில் சேர்க்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, கோர்ட் உத்தரவின் பேரில் லஞ்சஒழிப்பு போலீசார் விசாரித்து உம்மன்சாண்டிக்கு ஊழலில் தொடர்பில்லை என அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி அனிபா, அந்த அறிக்கையை ஏற்க மறுத்தார்.
'பாமாயில் இறக்குமதி குறித்து அப்போதைய நிதித்துறை அமைச்சரான உம்மன்சாண்டிக்கு தெரியும். இது தொடர்பான ஆவணம், அவரது அலுவலகத்தில் கிடைத்துள்ளதால், 3 மாதத்தில் இவ்வழக்கில் உம்மன்சாண்டியின் பங்கு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று நீதிமன்ற உத்தரவு குறித்து, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன், முதல்வர் உம்மன்சாண்டி ஆலோசித்தார். அதன்பின், இந்த வழக்கில் 3 வது முறையாக நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதை சந்திக்க தயாராக இருக்கிறேன், என்றார்.
இந்நிலையில், இன்று காலையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் ஆலோசித்த பின் நிருபர்களை சந்தித்த உம்மன்சாண்டி கூறுகையில், பாமாயில் வழக்கில் விசாரிப்பதில் என்னை விலக்கி உள்ளனர். எனக்கு பதிலாக யார் சேர்க்கப்படுவார்கள் என்பது குறித்து, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications