தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் இல்லை: ஜெயலலிதா
சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலே இல்லை என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் அதிமுக அரசை பாராட்டி தேமுதிக உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
அதிமுக அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்க பெருமையாக உள்ளது.
ஆனால் கடந்த திமுக ஆட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கூட அரசு உதவிகள் கிடைக்கவில்லை. அவர்கள் தயார் செய்திருந்த பட்டியலில் பெயர் இருந்தவர்களுக்கு மட்டும் தான் உதவித் தொகை வழங்கினர் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறுகையில்,
தமிழ்நாட்டைப் பொருத்த வரை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற பட்டியலே இல்லை என்பது தான் உண்மை. பிற மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு விலை, வறுமை மேல் உள்ளவர்களுக்கு ஒரு விலை என்ற நிலை உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரே விலை தான். மேலும், அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசோ வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலே தயாரிக்கப்படவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications