தேசியகீதத்தில் உள்ள "சிந்த்" என்ற வார்த்தையை நீக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு
மும்பை: சுதந்திரதினத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்திய தேசிய கீதத்தில் இருக்கும் "சிந்த்" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு "சிந்து" என்று மாற்றுமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்டே மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்டே தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
நமது தேசிய கீதத்தில் உள்ள "சிந்த்" என்ற வார்த்தை கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் "சிந்து" என்று அரசால் மாற்றப்பட்டது. ஆனால் அந்த மாற்றத்தை செயல்படுத்தாமல் தொடர்ந்து தவறாக "சிந்த்" என்று தான் பாடி வருகிறோம். "சிந்த்" என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி. "சிந்து" என்பது இந்தியாவில் ஓடும் நதி.
நம் நாட்டில் இரண்டு வேறுபட்ட தேசிய கீதத்தை பாடிவருகிறோம். சிலர் சிந்து என்ற சரியான வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சிந்த் என்ற தவறான வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றனர்.
எனவே, தேசிய கீதத்தில் உள்ள சிந்த் என்ற வார்த்தையை நீக்கி விட்டு சிந்து என்ற வார்த்தையை சேர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications