இப்ப, நாங்க தெளிவாயிட்டோம்: ராமதாஸ் சொல்கிறார்
செங்கல்பட்டு: இன்று, நாம் தெளிவு பெற்று தன்னிச்சையாகக் கட்சியை வளர்க்க, முடிவு செய்து விட்டோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம், கூடுவாஞ்சேரியில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ்,
உள்ளாட்சித் தேர்தலில், நம் கட்சி தனித்துப் போட்டியிடுவதை, தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். திராவிட கட்சிகளான திமுக, அதிமுக கரைந்து வருகின்றன. எந்தக் கட்சியையும் நம்பி பாமக துவக்கப்படவில்லை. மக்களை நம்பி துவக்கினோம்.
இனி திமுகவையும், அதிமுகவையும் நம்பி பயனில்லை. வானில் மேகமும், கடலில் நீரும் இருக்கும் வரை, திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தால், நாம் முதல்வராக முடியாது.
தமிழக முதல்வர் ஆடு, மாடு கொடுக்கிறேன் என்கிறார். இவ்வாறு செய்தால், படிப்பறிவு இல்லாத
நாடாக, தமிழகம் மாறிவிடும். ஏற்கனவே, தமிழகத்தில் தாலி இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்கள் குடித்துவிட்டு, குறுகிய வயதில் இறப்பதே இதற்குக் காரணம்.
பென்னாகரம் இடைத்தேர்தலில், திமுக ரூ. 75 ஆயிரம் கோடியை இறைத்து வெற்றி பெற்றது. பாமக 42,000 ஓட்டுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. அதே தொகுதியில், தற்போது நடந்த சட்டசபைத் தேர்தலில், திமுக டெபாசிட்டை இழந்துள்ளது.
நாம் ஆட்சிக்கு வந்தால், நகரத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள், மீண்டும் கிராமத்திற்கே திரும்பும் நிலைமை வரும். இன்று, நாம் தெளிவு பெற்று தன்னிச்சையாகக் கட்சியை வளர்க்க, முடிவு செய்து விட்டோம்.
உள்ளாட்சித் தேர்தலில், நம் கட்சியினர் யார் போட்டியிட்டாலும், ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். ஒரு ரூபாய் கூட செலவு செய்யக்கூடாது. பூத் செலவு கூட கேட்கக்கூடாது என்றார்.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ், திராவிட கட்சிகளோடு கூட்டணி சேர்ந்ததற்கும், அவர்களை ஆட்சியில் அமரவைத்ததற்கும் தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
பாமக தனித்து போட்டியிடும் என்ற முடிவை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த முடிவில் உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கிறார்கள். பாமக இருக்கும் காலம் வரை தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தலைமையை ஏற்று வருபவர்களுடன் கூட்டணி வைப்போம்.
நமக்கு ஆளும் தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கும் தகுதி கிடையாது. தமிழ்நாடு தாழ்ந்து கிடக்கிறது, தமிழ் மொழி வளர்ச்சி இல்லை, தமிழ் இனம் சீர்கெட்டு கிடக்கிறது. குடிக்கும் பழக்கம்தான் வளர்ந்துள்ளது.
தரமான, இலவச சமச்சீர் கல்வியை இதுவரை கொடுக்காததற்கு மன்னிப்பு கேட்பார்களா, மருத்துவ சிகிச்சையில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருப்பதற்கு மன்னிப்பு கேட்பார்களா, எங்கு பார்த்தாலும் ரியல் எஸ்டேட் தொழில். விவசாயி வாழ வழி இல்லை.
டி.வி, சினிமா மூலம் தமிழ் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக கெடுத்து விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும். அப்போது நானே 5 கடைகளை அடித்து நொறுக்குவேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications